Skip to main content
மதுபோதையில் டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய ஆடவருக்குச் சிறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மதுபோதையில் டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய ஆடவருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
மதுபோதையில் டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய ஆடவருக்குச் சிறை
படம்: CNA/Ili Mansor
மதுபோதையில் 66 வயது டாக்சி ஓட்டுநரைக் குத்தி அவருடைய கழுத்தை நெரித்த ஆடவருக்கு 12 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

53 வயது பே ஜெட் லூன்னும் (Phay Jet Loon) அவர் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணும் மதுபோதையில் டாக்சியில் ஏறினர்.

இருவரும் பின்னிருக்கையில் சண்டையிட்டுக்கொண்டே இருந்ததால் சண்டையை நிறுத்தும்படி டாக்சி ஓட்டுநர் சொன்னார்.

அதில் கோபமடைந்த ஆண் பயணி டாக்சி ஓட்டுநரைத் தாக்கினார்.

சம்பவம் சென்ற ஆண்டு மே 27ஆம் தேதி நடந்தது.

ஓட்டுநர் தாக்கப்பட்டபோது டாக்சி விரைவுச்சாலையில் குறுக்கே சென்றது.

வேறெந்த வாகனம் மீது மோதவில்லை.

ஓட்டுநர் டாக்சி நிறுவனத்தை உதவிக்காக அழைத்தார்.

சிராங்கூன் ரோடு வரை டாக்சியை மெதுவாக ஓட்டிச் சென்றார்.

டாக்சி திடீரென தடம் மாறியபோது ஆண் பயணியின் தலை சன்னலில் மோதியது.

அதன் பிறகு அவர் பின்னருக்கையிலேயே தூங்கிவிட்டார்.

அந்த நபர் தாக்கியதில் டாக்சி ஓட்டுநரின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

அவருடைய மொத்த மருத்துவச் செலவு 159 வெள்ளி.

தாக்கிய ஆடவர் பே ஓட்டுநருக்கு இழப்பீடு வழங்கினார்.

டாக்சியை ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுநரைத் தாக்கியதால் அதில் இருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் விரைவுச்சாலையில் சென்ற மற்றவர்களுக்கும் பே ஆபத்தை உண்டாக்கியதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

மற்றவர்களை வேண்டுமென்றே காயப்படுத்தினால் அதிகபட்சம் 3 ஆண்டுச் சிறை, 5,000 வெள்ளிவரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்