Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ரயில் சேவைத் தடங்கல் - PSLE தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசச் சேவை வழங்கிய டாக்சி ஓட்டுநர்கள்

வாசிப்புநேரம் -
ரயில் சேவைத் தடங்கல் - PSLE தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசச் சேவை வழங்கிய டாக்சி ஓட்டுநர்கள்

CNA/Wallace Woon and Marcos Ramos

இன்று PSLE தேர்வு ஆரம்பமாகியுள்ளது.

கிழக்கு மேற்கு பாதையின் ரயில் சேவையில் ஏற்பட்ட தடங்கல் இன்னமும் தொடர்கிறது.

அதனைக் கருத்தில்கொண்டு தேர்வு எழுதப் பள்ளிக்கு அவசரமாகச் சென்ற மாணவர்களுக்குச் சிலர் இலவச டாக்சி சேவை வழங்கியதாக 8 World செய்தித்தளம் தெரிவித்தது.

மாணவர்களை உடனடியாகப் பள்ளிக்குக் கொண்டுசெல்ல டாக்சி ஓட்டுநர்கள் சிலர் முன்வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜூரோங் ஈஸ்ட் (Jurong East) ரயில் நிலையத்திற்கு அருகே டாக்சி ஓட்டுநர்கள் சிலர் மாணவர்களை ஏற்றிச்செல்வதைப் பார்க்கமுடிந்ததாக 8 World செய்தித்தளம் கூறியது.

PSLE தேர்வுக்குத் தாமதமாகச் செல்லும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று SEAB எனப்படும் சிங்கப்பூர்த் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகம் நேற்றிரவு (25 செப்டம்பர்) உறுதியளித்தது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்