TCM - மேற்கத்திய மருத்துவம் - எப்படி ஒருங்கிணைக்கலாம் என்று ஆராயும் சுகாதார அமைச்சு
வாசிப்புநேரம் -

( படம்: AFP )
சீனப் பாரம்பரிய மருத்துவச் சிகிச்சைகள் சிலவற்றைத் தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பில் சேர்ப்பது குறித்து சிங்கப்பூர் யோசித்து வருகிறது.
18 பரிந்துரைகள் முதலில் சோதித்துப் பார்க்கப்படும்.
அந்த விவகாரத்தில் கவனமான அணுகுமுறையைப் பின்பற்றுவதாகச் சுகாதார அமைச்சு கூறியது.
பொதுமக்களின் நலனே முக்கியம் என்று அது வலியுறுத்தியது.
சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் மேற்கத்திய மருத்துவமும் சீன மருத்துவமும் சேர்ந்து சுகாதாரத் தேவையை நிறைவு செய்யமுடியும் என்று சிங்கப்பூரர்கள் கருதுவதாய்த் தேசிய ஆய்வு சொல்கிறது என்றார்.
முழுமையாக அதை அப்படியே ஏற்றுக்கொள்வது திட்டமல்ல என்பதை வலியுறுத்த விரும்புவதாய் அமைச்சர் குறிப்பிட்டார்.
நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அறிவியல்பூர்வமாக எது ஏற்புடையதோ அதை ஏற்கலாம் என்றார் அவர்.
சில சீனப் பாரம்பரிய சிகிச்சைகள் ஏற்கனவே தேசியச் சுகாதாரப் பராமரிப்பில் சேர்ந்துவிட்டன. முதுகுவலி, கழுத்துவலி போன்றவற்றுக்கான சிகிச்சைக்குக் கட்டணச் சலுகையும் கொடுக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு சிறந்த TCM துறையினருக்குத் தேசிய அளவில் விருது வழங்கப்படும். துறையின் தரத்தை உயர்த்த அந்த அங்கீகாரம் உதவும் என்று நம்பப்படுகிறது.

ஆதாரம் : Others