சிங்கப்பூர்த் தலைவர்களின் ஆசிரியர் தின வாழ்த்து
AFP
This audio is generated by an AI tool.
இன்று ஆசிரியர் தினம்.
மாணவர்களைக் கைதூக்கிவிடும் ஆசான்களை அங்கீகரிக்கும் நாள்.
சிங்கப்பூர்த் தலைவர்கள் அவர்களது ஆசிரியர் தின வாழ்த்துகளைச் சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.
அவற்றுள் சில....
1. பிரதமர் லாரன்ஸ் வோங்
ஆசிரியர்கள், கல்வியாளர்களின் அர்ப்பணிப்பு, பொறுமை, அக்கறை ஆகியவற்றுக்கு நன்றி!
2. மூத்த அமைச்சர் லீ சியன் லூங்
அடுத்த தலைமுறையைப் பேணி வளர்க்கும் ஆசிரியர்களுக்கு நன்றி!
3. தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா சண்முகம்
ஆசிரியர்களின் அக்கறையையும் அர்ப்பணிப்பையும் பாராட்டும் நாள் மட்டுமல்ல... அவர்களை அங்கீகரிக்கும் நாள் இது.
4. துணைப்பிரதமர் கான் கிம் யோங்
அடுத்த தலைமுறையினரைச் செதுக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி!
5. கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ
ஒவ்வொரு மாணவரது கனவின் பின்னணியிலும் அவர் மீது முதன்முதலில் நம்பிக்கை வைத்த ஓர் ஆசிரியர் இருக்கிறார்.
6. சுகாதார அமைச்சர் ஓங் யீ காங்
ஆசிரியர்கள் இளையர்களின் மனத்தில் விதைக்கும் எண்ணங்கள் அவர்களைச் செதுக்கிச் சிறப்பாக்கும்.
7. தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட்
இளையர்கள் பெரிய கனவுகள் காண உந்துதலாக இருக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி!