Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய சேவையாற்றும் விளையாட்டாளர்கள் மீது சுமத்தப்படும் எதிர்பார்ப்புகள் - ஸ்கூலிங்கின் கேள்விக்குப் பதில்

வாசிப்புநேரம் -
தேசிய சேவையாற்றும் விளையாட்டாளர்கள் மீது சுமத்தப்படும்  எதிர்பார்ப்புகள் - ஸ்கூலிங்கின் கேள்விக்குப் பதில்

(படம்: SportSG/Andy Chua) 

சிங்கப்பூரில் ஒரு விளையாட்டாளர் தேசிய சேவை உட்பட வாழ்க்கையின் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை சிங்கப்பூரின் விளையாட்டு அமைப்பு கருத்தில் கொள்கிறது.

தேசிய சேவையாற்றும் விளையாட்டாளர்கள் மீது சுமத்தப்படும் எதிர்பார்ப்புகள் குறித்து தேசிய அளவில் கலந்துரையாடல் நடத்த ஒலிம்பிக் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் (Joseph Schooling) அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார்.

அதுபற்றி ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு சிங்கப்பூர் விளையாட்டுக் கழகத் தலைவர் சூ சுன் வேய் (Su Chun Wei) பதிலளித்தார்.

விளையாட்டாளர்களின் பயிற்சித் திட்டங்களில், தேசிய சேவை ஒன்றிணைக்கப்படுவதால் அவர்களுக்குத் தேவையான ஆதரவு கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.

எந்தவொரு சூழலிலும், விளையாட்டாளர்களுக்கு ஆகச் சிறந்த ஆதரவை வழங்கவே அதிகாரிகள் விரும்புவதாக அவர் சொன்னார்.

மீள்திறனிலும் மாறாத உறுதியிலும் கவனம் செலுத்துவதே முக்கியம் என்றும் அவர் கூறினார்.

எல்லாவிதமான சூழ்நிலைகளுக்கும் ஏற்ப, நீக்குப்போக்குடன் மாறிக்கொள்ளும் திறன் முக்கியம் என்பதை டாக்டர் சூ வலியுறுத்தினார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்