$38 மில்லியன் கள்ளப் பணம் மூலம் பங்களா வாங்கியதாக Aperia Group தலைமை நிர்வாக அதிகாரி மீது குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -
படம்: CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Aperia குழுமத் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலன் வெய் (Alan Wei) 38 மில்லியன் வெள்ளி கள்ளப் பணத்தை நல்லப் பணமாக மாற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர் கள்ளப் பணத்தைக் கொண்டு பங்களா வீட்டை வாங்கியதாகக் கூறப்பட்டது.
2024இல் அவர் 12 சீ ஹூன் அவென்யூவில் (Chee Hoon Avenue) உயர்தர பங்களாவை (Good Class Bungalow) வாங்கினார். அதன் விலை 55 மில்லியன் வெள்ளி. அதில் 38 மில்லியன் கள்ளப் பணம் என்று நம்பப்படுகிறது.
அந்த பங்களாவை விற்கக் காவல்துறை சென்ற வாரம் தடை விதித்தது.
பல்வேறு குற்ற நடவடிக்கைகள் மூலம் வெய் 3.2 மில்லியன் வெள்ளி லாபம் ஈட்டியதாகவும் சொல்லப்பட்டது.
அவர் மீது மொத்தம் 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை கணினிச் சாதனங்கள் வாங்குவது தொடர்பான மோசடிகள் என்று தெரிகிறது.
Aperia குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜென்னி லிம் (Jenny Lim), விற்பனைத் தலைவர் ஏரன் வூ (Aaron Woo) இருவரும் வெய்க்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
திரு வெய் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

ஆதாரம் : CNA