Skip to main content
போதைப்பொருள் உட்கொண்டு காரை ஓட்டிய சந்தேகத்தில் இளையர் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

போதைப்பொருள் உட்கொண்டு காரை ஓட்டிய சந்தேகத்தில் இளையர் கைது

வாசிப்புநேரம் -
போதைப்பொருள் உட்கொண்டு காரை ஓட்டிய சந்தேகத்தில் இளையர் கைது
படம்: SG Road Vigilante's Facebook page
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 18 Jan 2026 12:33PM புதுப்பிப்பு : 18 Jan 2026 06:09PM

சிங்கப்பூரில் போதைப்பொருள் உட்கொண்டு ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய சந்தேகத்தில் இளையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு வயது 17.

போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கு அவர் இணங்கவில்லை.

நேற்று முன்தினம் (ஜனவரி 16) இரவு 10.50 மணியளவில் அவரைச் சோதிக்க அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

ஆனால் அந்த இளையர் வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றார்.

பாயா லேபார் ரோடு வழியே அப்பர் பாயா லேபார் ரோட்டை நோக்கிச் செல்லும் பகுதியில் அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அப்போது சோதனைக்காக கார் ஒன்றை அவர்கள் நிறுத்தினர்.

ஆனால் அந்தக் கார் ஓட்டுநர் நிறுத்தாமல் காரை வேகமாக ஓட்டிச்சென்றதாக அதிகாரிகள் CNA-யிடம் கூறினர்.

அப்போது கார் 4 கார்களுடனும் வேன் ஒன்றுடனும் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கார் மரின் பரேட் ரோடு வழியே காணப்பட்டது.

அங்கிருந்து ஓடிய ஓட்டுநர் விரைவில் கைதுசெய்யப்பட்டார்.

அவருடைய காரில் மின் சிகரட் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்