காவல்துறையின் கேமராவைத் திருப்பிவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் இளையர் கைது
This audio is generated by an AI tool.
காவல்துறையினரின் கேமரா செயல்முறையில் தடங்கல் ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 14 வயது இளையர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 22ஆம் தேதி பொங்கோல் டவுன் சதுக்கத்தில் (Punggol Town Square) இளையரின் செயல் கேமராவில் பதிவானது.
அவர் கேமராவை இன்னொரு திசையை நோக்கித் திருப்பிவிட்டதாக நம்பப்படுகிறது.
அதனால் கேமரா செயல்படாமல்போனதாகவும் அதைப் பின்னர் சீர்செய்யவேண்டியிருந்ததாகவும் காவல்துறையினர் கூறினர்.
திங்கட்கிழமை (2 பிப்ரவரி) அதே இளையர் கேமராவை இன்னொரு திசையை நோக்கித் திருப்பிவிட்டதாக நம்பப்படுகிறது.
கேமராவை மீண்டும் பழுதுபார்க்க நேரிட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.
இளையர் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.