Skip to main content
Telegram, Instagram
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Telegram, Instagram-இல் SG60, CDC பற்றுச்சீட்டு மோசடி

வாசிப்புநேரம் -
Telegram, Instagram-இல் SG60, CDC பற்றுச்சீட்டு மோசடி

(படம்: Singapore Police Force)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Telegram, Instagram தளங்களில் அரசாங்கப் பற்றுச்சீட்டுகள் தொடர்பான மோசடிகள் அதிகரித்திருப்பதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.

அந்தத் தளங்களில் போலிக்கணக்குகள் SG60, CDC பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும்படிப் பொதுமக்களை ஊக்குவிப்பதாக அது சொன்னது.

அவை அதிகாரத்துவ அரசாங்கக் கணக்குகள் போன்று காட்சியளிக்கலாம் என்று அது கூறியது.

அவை அனுப்பும் இணையப்பக்க முகவரியில் மக்களின் தொலைப்பேசி எண், பெயர், அடையாள எண் ஆகிய தகவல்கள் கேட்கப்படுகின்றன.

மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டோரின் Telegram கணக்கையும் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்கின்றனர் என்றது காவல்துறை.

Telegram, Instagram தளங்களில் அதிகாரத்துவ “gov.sg” கணக்கு, தகவல்களைப் பகிர மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அது தெரிவித்தது.

அரசாங்கப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள தொலைபேசி, சமூக ஊடகம் அல்லது மின்னஞ்சல் வழி மக்கள் தொடர்பு கொள்ளப்படமாட்டார்கள் என்றும் அது குறிப்பிட்டது.

பற்றுச்சீட்டுகளைப் பெற பணத்தைப் பரிமாற்றம் செய்யவோ புதிய செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவோ தேவையில்லை என்று அது சொன்னது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்