தெலுக் பிளாங்கா ஹைட்ஸில் ஆடவர் மரணம் - 32 வயது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -
(படம்: Screengrab from Google Maps)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தெலுக் பிளாங்கா ஹைட்ஸில் (Telok Blangah Heights) ஒருவர் மாண்டதைத் தொடர்ந்து 32 வயது ஆடவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்படவிருக்கிறது.
சம்பவத்தில் 73 வயது ஆடவர் மாண்டார்.
53 வயது ஆடவர் காயமடைந்தார்.
நேற்று மாலை 6 மணியளவில் புளோக் 61 தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் பகுதியில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியது.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது புளோக்கின் கீழ் 73 வயது ஆடவர் அசைவின்றிக் காணப்பட்டார்.
காயமுற்ற 53 வயது ஆடவரும் அங்கு இருந்தார்.
இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு 73 வயது ஆடவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 32 வயது ஆடவர் பின்னர் காவல்துறையிடம் சரணடைந்தார்.
அவர் தனியாளாகச் செயல்பட்டிருக்கலாம் என்று காவல்துறை நம்புகிறது.
அந்தத் தாக்குதல் சமய ரீதியாகவோ பயங்கரவாத நோக்கத்துடனோ நடத்தப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று அது கூறியது.

ஆதாரம் : CNA