தெலுக் பிளாங்கா கொலை: சம்பவ இடத்துக்குத் திரும்பிய சந்தேக நபர்
CNA/Syamil Sapari
This audio is generated by an AI tool.
தெலுக் பிளாங்கா ஹைட்ஸில் (Telok Blangah Heights) ஆடவர் ஒருவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 32 வயது ஆடவர் இன்று சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிங்கப்பூரரான கேப்ரியல் ஃபூங் ஷி செங் (Gabriel Foong Shi Cheng), 73 வயது தாம் நாம் போவைக் (Tham Nam Poh) கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
சம்பவம் எப்படி நடந்தது என்பதைப் பற்றி மேலும் ஆராய ஃபூங் சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவல்துறை அதிகாரிகளுடன் புளோக்கின் கீழ்த்தளத்தில் நடந்து சென்ற அவர், விசாரணை அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
விசாரணை சுமார் 10 நிமிடங்களுக்கு நீடித்ததாகக் கூறப்பட்டது.
சம்பவம் கடந்த மாதம் அக்டோபர் ஐந்தாம் தேதி நடந்தது.
புளோக் 61 தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் பகுதியில் உதவிகேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியது.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது புளோக்கின் கீழ்த்தளத்தில் ஆடவர் அசைவின்றிக் காணப்பட்டார்.
காயமுற்ற 53 வயது ஆடவரும் அங்கிருந்தார்.
இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அதன்பின், ஃபூங் காவல்துறையைத் தொடர்புகொண்டு சரணடைந்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம்.