தெமாசிக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிகர முதலீட்டு மதிப்பு 10.5% உயர்ந்தது
படம்: CNA/Abigail Ng
This audio is generated by an AI tool.
தெமாசிக் ஹோல்டிங்ஸ் (Temasek Holdings) நிகர முதலீட்டு மதிப்பு 10.5 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.
இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி அதன் மதிப்பு 518 பில்லியன் வெள்ளி.
பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூர் நிறுவனங்களின் லாபமும், சொத்து விற்பனையும் வளர்ச்சிக்குத் உறுதுணையாய் இருந்தன.
ஈரான் போரால் அனைத்துலக அளவில் நிச்சயமற்ற சூழல் நீடித்ததால் 2026இன் வளர்ச்சி அதற்கு முன்னைய ஆண்டை விட மெதுவாக இருந்தது.
சென்ற ஆண்டு வளர்ச்சி 11.9 விழுக்காடு அதிகரித்தது.
நிறுவனத்தின் நிகர முதலீட்டு மதிப்பு சென்ற ஆண்டு 469 பில்லியன் வெள்ளியாக இருந்தது.
தற்போது அரை நூற்றாண்டு காணாத சிக்கலான சூழல் நீடிப்பதாகத் தெமாசிக் ஹோல்டிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
இருப்பினும் நிறுவனம் தொடர்ந்து செழிக்க முடிந்ததாக அவர் கூறினார்.
DBS, Singtel, Singapore Airlines ஆகிய சிங்கப்பூர் நிறுவனங்களில் தெமாசிக் ஹோல்டிங்ஸ் 40 விழுக்காட்டுக்கு மேல் முதலீடு செய்துள்ளது.