Skip to main content
செயற்கை நுண்ணறிவில் முதலீட்டைப் பெருக்க விரும்பும் Temasek Holdings
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

செயற்கை நுண்ணறிவில் முதலீட்டைப் பெருக்க விரும்பும் Temasek Holdings

வாசிப்புநேரம் -
செயற்கை நுண்ணறிவில் முதலீட்டைப் பெருக்க விரும்பும் Temasek Holdings

படம்: CNA/Jeremy Long

வெளியீடு : 08 Jul 2026 03:53PM புதுப்பிப்பு : 08 Jul 2026 06:14PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தெமாசிக் ஹோல்டிங்ஸ் (Temasek Holdings), செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் இரண்டு மடங்குக்கு மேல் முதலீட்டை உயர்த்தவிருக்கிறது.

தற்போது அது செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் 6 விழுக்காடு முதலீடு செய்துள்ளது.

2031ஆம் நிதியாண்டு இறுதிக்குள் அதை 15 விழுக்காடு வரை உயர்த்த தெமாசிக் ஹோல்டிங்ஸ் திட்டமிட்டுள்ளது.

அதிவேக வளர்ச்சி காணும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முக்கியமான கட்டத்தில் இருக்கிறது; அது பெரிய அளவில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று தெமாசிக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சொன்னது.

எரிசக்தி, தரவு நிலையங்கள் (data centres), பகுதி மின்கடத்தி (Semiconductor), cloud சேவை நிறுவனங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படலாம் என்று தெமாசிக் ஹோல்டிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

இந்தச் செய்தி குறித்த மேல்விவரங்கள் விரைவில்.... 

'செய்தி' இணையவாசலுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்