Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 75 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யும் துமாசிக்

வாசிப்புநேரம் -
புதிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 75 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யும் துமாசிக்

(படம்: AFP/ROSLAN RAHMAN)

துமாசிக் நிறுவனம், புதிதாகத் தொடங்கப்படும் தொழில்நுட்ப நிறுவனங்களில் 75 மில்லியன் வெள்ளியை முதலீடு செய்யவுள்ளது.

அதற்காக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடனும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துடனும் அது கைகோத்துள்ளது.

உலக அளவில் பெரிய சந்தை வாய்ப்புகளைக் கொண்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும்.

எரிசக்தி உருமாற்றம், உயிர் தொழில்நுட்பம், அடுத்த தலைமுறைக் கணினி இயக்கம் ஆகியவை மிகப் பெரிய சந்தைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்குவது உலக அளவில் பொருளியல் ரீதியிலான பல சவால்களைக் களைய உதவும் என்று நம்பப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 2 புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு வழிகாட்டுதலும் நிதியுதவியும் வழங்கப்படும்.

மேலும் நெறிப்படுத்தப்பட்ட மதிநுட்பச் சொத்து உரிமக் கட்டமைப்பும் உருவாக்கப்படும்.

உரிமம் வழங்கும் செயல்முறைகளை அது 5 மாதங்களிலிருந்து ஒரு மாதத்துக்குக் குறைக்கும்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்