Skip to main content
மதுபோதையில் வாகனமோட்டிய மூத்த வழக்கறிஞருக்குச் சிறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மதுபோதையில் வாகனமோட்டிய மூத்த வழக்கறிஞருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
மதுபோதையில் வாகனமோட்டியதை ஒப்புக்கொண்ட மூத்த வழக்கறிஞர் ஸ்டீவன் ஜான் லாமுக்கு (Steven John Lam) எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு 18,000 வெள்ளி அபராதமும் வாகனமோட்டத் தடையும் விதிக்கப்பட்டது.

56 வயது ஸ்டீவனின் அமைதித் தூதர் பதவியும் பறிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.

அவர் 2023ஆம் ஆண்டில் அமைதித் தூதராக நியமிக்கப்பட்டார்.

ஸ்டீவன் Templars சட்ட நிறுவனத்தின் நிறுவனர், அதன் இயக்குநர்.

அவர் 2024 ஏப்ரல் மாதம் நண்பர்களோடு குடித்துவிட்டு புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பின் மீது மோதினார்.

காவல்துறை அதிகாரிகள் அவரைச் சோதித்தபோது அவர் வாகனத்தைத் தாம் ஓட்டவில்லை என்று இரண்டு முறை பொய் சொன்னார்.

அமைதித் தூதர் என்றால் என்ன?

அமைதித் தூதர்கள் அரசு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளில் சமரசம் பேச உதவுவார்கள். திருமணப் பதிவுச் சடங்கையும் அவர்கள் வழிநடத்துவார்கள்.

தொழில், பொதுச்சேவை, சமூகப்பணி ஆகியவற்றில் சிறந்த பங்களிப்புகளைச் செய்தவர்கள் அதிபரால் அமைதித் தூதராக நியமிக்கப்படுவர்.

அமைதித் தூதரின் தவணைக் காலம் 5 ஆண்டு.

அமைதித் தூதர்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் இருக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்