Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

எல்லைதாண்டிய பயணச் சேவைகளைச் சட்டவிரோதமாக வழங்கிய 10 வாகனங்கள் பறிமுதல்

வாசிப்புநேரம் -
எல்லைதாண்டிய பயணச் சேவைகளைச் சட்டவிரோதமாக வழங்கிய 10 வாகனங்கள் பறிமுதல்

படம்: Facebook/Sun Xueling

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் சட்டவிரோதமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று (2 அக்டோபர்) தீவு முழுதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் வாகனங்கள் பிடிபட்டன.

அவை எல்லைதாண்டிய பயணச் சேவைகள் வழங்கவும் பயன்படுத்தப்பட்டன.

அவ்வாறு 102 வாகனங்கள் ஜூலை மாதத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய வளர்ச்சி, போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) Facebook பதிவில் சொன்னார்.

ஓட்டுநர்களுக்குத் தகுந்த உரிமமும் காப்புறுதியும் இல்லை.

Comfort Delgro, Strides Premier ஆகிய நிறுவனங்கள் எல்லைதாண்டிய பயணச் சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளதைத் திருவாட்டி ஷுவெலிங் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்