தைப்பூசத் திருவிழா: காவடி, பால்குடத்திற்கு இணையத்தில் முன்பதிவு கட்டாயம்
This audio is generated by an AI tool.
தைப்பூசத் திருவிழா பிப்ரவரி முதல் தேதி நடைபெறும் நிலையில் இந்து அறக்கட்டளை வாரியமும் திருவிழாவை ஏற்றுநடத்தும் இரு கோயில்களும் ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.
காவடி, பால்குட நேர்த்திக் கடன் செலுத்த விரும்பும் பக்தர்கள் இணையத்தில் பதிவு செய்வது கட்டாயம்.
பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் நுழைவாயில்கள் திறக்கப்படுவதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
முன்பதிவு செய்யும்போதே பக்தர்கள் தங்களுக்குரிய நேரத்தை தேர்ந்தெடுக்கலாம்.
ஆதரவாளர் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருக்கும்படி ஏற்பாட்டுக் குழு வலியுறுத்தியது.
பக்தர்கள் ஆக அண்மை விவரங்களைப் thaipusam.sg இணையப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Thaipusam SG WhatsAppஇல் சேர்ந்து முக்கியமான அறிவிப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம்.