அன்றும் இன்றும்: 1930-களில் தைப்பூசம்
இந்துக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்குத் தைப்பூசம் மிக முக்கியமான விழா.

படம்: NAS
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
இந்துக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்குத் தைப்பூசம் மிக முக்கியமான விழா.
பலர் கடவுளுக்குப் பணம், பழங்கள், பால் போன்றவற்றைக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். சில பக்தர்கள், அவர்களின் வேண்டுதல் நிறைவேறினால், பல வருடங்களுக்குக் காவடியும் எடுப்பார்கள்.

அவரவரின் வேண்டுதலைப் பொறுத்து வெவ்வேறு மக்கள் வெவ்வேறு விதமான காவடியை எடுப்பர்.
வேறு சிலரோ பால்குடம் அல்லது பால்காவடி எடுப்பார்கள் என்கிறார் முன்பு சிங்கப்பூர் ஆயுதப் படை மற்றும் ஷெல் நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த T.R.S. பதி.