Skip to main content
மீடியாகார்ப் 'செய்தி'யின் "தமிழில் யோசி, தமிழில் வாசி" போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மீடியாகார்ப் 'செய்தி'யின் "தமிழில் யோசி, தமிழில் வாசி" போட்டி- AI அம்சங்களுடன்!

வாசிப்புநேரம் -
மீடியாகார்ப் 'செய்தி'யின் "தமிழில் யோசி, தமிழில் வாசி" போட்டி- AI அம்சங்களுடன்!
வெளியீடு : 02 Jul 2026 06:26PM புதுப்பிப்பு : 03 Jul 2026 06:46AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மீடியாகார்ப் 'செய்தி' ஆண்டுதோறும் நடத்தும் "தமிழில் யோசி! தமிழில் வாசி!" போட்டி நிகழ்ச்சியில் இந்த ஆண்டு AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

செய்தித் துறையில் மொழிபெயர்ப்பது சிரமமா?

அதை எளிதாகச் செய்வது எப்படி?

14 முதல் 19 வயதுவரை உள்ள மாணவர்களுக்குச் சுவாரஸ்யமாகக் கற்றுக்கொடுக்கும் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி இது.

மீடியாகார்ப் "செய்தி" ஐந்தாவது முறையாக நிகழ்ச்சியை நடத்துகிறது.

AIஐ அடிப்படையாகக் கொண்ட வித்தியாசமான அங்கங்கள், பயிலரங்கு, விளையாட்டுகள், போட்டிகள், பரிசுகள்... இவை அனைத்தையும் எதிர்பார்க்கலாம்.

வெற்றி பெறும் மாணவர்களுக்குக் கோப்பைகளும் பற்றுச்சீட்டுகளும் காத்திருக்கின்றன.

ஜூலை மாதம் 25ஆம் தேதி மீடியாகார்ப் வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.

ஒவ்வோர் ஆண்டும் நிகழ்ச்சியில் 100க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சி தகவல் மின்னிலக்க மேம்பாடு அமைச்சின் தேசிய மொழிபெயர்ப்புக் குழு, சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவில் நடைபெறுகிறது.

உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற் கல்லூரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர்கள் TamilDigi [at] mediacorp.com.sg எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

ஒவ்வொரு கல்வி நிலையத்திலிருந்தும் அதிகபட்சம் 5 மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

முதலில் விண்ணப்பம் செய்யும் 100 பேருக்கு மட்டுமே வாய்ப்பு!
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்