மெக்சிமிலியன் மேடருக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது: அதிபர் தர்மன்

(படம்: Facebook/Tharman Shanmugaratnam)
"மெக்சிமிலியன் மேடருக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ஒலிம்பிக் kitefoiling போட்டியில் பதக்கம் வென்ற ஆக இளைய விளையாட்டாளர் எனும் பெருமை அவரைச் சேரும். வயதுக்கு அப்பாற்பட்ட பக்குவம் மேடருக்கு உண்டு. பல இளம் சிங்கப்பூரர்கள் விளையாட்டுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். பெற்றோரின் ஆதரவு இருந்தால் விளையாட்டுகளில் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை நமது இளம் விளையாட்டாளர்கள் காட்டியிருக்கின்றனர்," என்றார் அதிபர் தர்மன்.
17 வயது மேடர் ஆண்களுக்கான kitefoiling எனும் நீர்சாகச விளையாட்டின் இறுதிச்சுற்றில் சிங்கப்பூருக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்திருக்கிறார்.