Skip to main content
தீமிதித் திருவிழா 2026
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தீமிதித் திருவிழா 2026- நவம்பர் 1...பதிவு செப்டம்பர் 24 முதல்

வாசிப்புநேரம் -
தீமிதித் திருவிழா 2026- நவம்பர் 1...பதிவு செப்டம்பர் 24 முதல்

(கோப்புப் படம்: துர்காநந்தினி தனபாலன்)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்த ஆண்டு தீமிதித் திருவிழா நவம்பர் முதல் தேதி நடைபெறும்.

ஆகஸ்ட் 17ஆம் தேதி கொடியேற்றமும் மூன்று மாதங்களுக்குப் பல்வேறு நிகழ்ச்சிகளும் சடங்குகளும் சௌத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறவுள்ளன.

பால்குடம், அங்கப்பிரதட்சணம், கும்பிடுதண்டம் முதலிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற விரும்பும் பக்தர்கள் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் இணையத்தில் முன்பதிவு செய்யலாம்.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு நேரடியாகச் சென்று பதிந்துகொள்ளும் வசதி இல்லை. கூடிய விரையில் இணையத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தீமிதியில் பங்கேற்பவர்கள் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து ஸ்ரீ மாரியம்மன் கோயில் வரை பாத யாத்திரை மேற்கொள்வர்.

இந்து அறக்கட்டளை வாரியம் இன்று வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

மேல் விவரங்களுக்கு அணுகவேண்டிய முகவரி

தொலைபேசி எண்: 6223 4064
இணையத்தளம்: https://heb.org.sg/
Facebook பக்கம்: facebook.com/hinduendowmentsboard
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்