சாங்கி விமான நிலையத்தில் திருட்டு - இந்தோனேசியப் பெண் கைது
வாசிப்புநேரம் -
படம்: SPF
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சாங்கி விமான நிலையத்தில் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் இந்தோனேசியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாம் முனையத்தின் இடைவழிப் பகுதியில் இருக்கும் கடையில் திருட்டு நடந்தது.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு வயது 40.
அவர் 736 வெள்ளி மதிப்புள்ள முகப் பராமரிப்புப் பொருள்களைத் திருடியதாக நம்பப்படுகிறது.
பெண் சந்தேகத்திற்குரிய முறையில் நடந்துகொண்டது கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
அவர் கட்டணம் ஏதும் செலுத்தாமல் கடைக்கு வெளியே சென்றதைக் காணொளியில் பார்க்க முடிந்தது.
கடையில் பணியாற்றிய அதிகாரி மே 31ஆம் தேதி காவல்துறைக்குப் புகார் கொடுத்தார்.
கண்காணிப்புக் கேமரா பதிவுகள், விசாரணை ஆகியவற்றின் மூலம் காவல்துறை பெண்ணை அடையாளம் கண்டது.
பெண் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் முன்பு அதிகாரிகள் அவரைக் கைது செய்து பொருள்களை மீட்டனர்.
அவர் பொருள்களை வாங்காமல் அவற்றை மறைத்தபடி கடையிலிருந்து வெளியேறினார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
பெண் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும்.

ஆதாரம் : Mediacorp Seithi