Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பயணியின் Airpodsஐத் திருடிய சந்தேகத்தில் துணைக் காவல் அதிகாரி மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தில் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு வயது 29.

சென்ற வெள்ளிக்கிழமை (28 பிப்ரவரி) திருட்டுச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

அது சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் பணிபுரியும் துணைக் காவல் அதிகாரி சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் அவரின் Airpodsஐ விமானத்தில் விட்டுச்சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.

விமானச் சிப்பந்தி அதனைக் கண்டுபிடித்தார்.

அப்போது பணியில் இருந்த துணைக் காவல் அதிகாரியிடம் அவர்கள் காணாமற்போன Airpodsஐ ஒப்படைத்தனர்.

ஆனால் அந்த அதிகாரி அதனைத் தம்முடைய சொந்தப் பயன்பாட்டுக்காக வைத்துக்கொண்டார்.

அதற்குப் பதிலாக தம்மிடம் இருந்த காதொலிக்கருவியை "Lost and Found" எனப்படும் காணாமற்போன பொருள்களை ஒப்படைக்கும் பிரிவில் சந்தேக நபர் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் காதொலிக்கருவிகளைப் பெற்றுக்கொள்ள அழைக்கப்பட்டார்.

அப்போது அது தம்முடையது அல்ல என்று பாதிக்கப்பட்டவர் கூறியிருக்கிறார்.

சந்தேக நபரின் நிறுவனம் விசாரணை நடத்தியதில் உண்மை வெளியானது.

அவர் பிறகு கைதுசெய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரின் Airpods மீண்டும் பெறப்பட்டது.

சந்தேக நபர் மீது நாளை (7 மார்ச்) குற்றஞ்சாட்டப்படும்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்