Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"சிங்கப்பூருக்கும் துருக்கியேவுக்கும் இடையே ஆழமான ஒத்துழைப்பு ஏற்பட வாய்ப்புண்டு"

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்கும் துருக்கியேவுக்கும் இடையே இன்னும் ஆழமான ஒத்துழைப்பு ஏற்படுவதற்கு அதிகச் சாத்தியம் உள்ளதாக மூத்த அமைச்சர் தியோ சீ ஹியன் (Teo Chee Hean)கூறியிருக்கிறார்.

இரு நாடுகளும் உத்திபூர்வ உறவின் பத்தாம் ஆண்டு நிறைவையும்
அரசதந்திர உறவின் 55ஆம் ஆண்டு நிறைவையும் அனுசரிக்கின்றன.

துருக்கியேவுக்குச் சென்றுள்ள மூத்த அமைச்சர் தியோ, அந்நாட்டுத் துணை அதிபர், மூத்த பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்தார்.

இருதரப்பும் அவற்றின் நெருக்கமான, நட்பார்ந்த உறவை மறுஉறுதிப்படுத்தின.

உலகளாவிய, வட்டார நிலவரங்கள் குறித்த கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற்றது.

நிதித் தொழில்நுட்பம், மின்னிலக்கம் ஆகிய புதிய அம்சங்களில் சிங்கப்பூரும் துருக்கியேவும் ஒத்துழைப்பது குறித்துக் கலந்துபேசப்பட்டது.

திரு தியோ அடுத்து சவூதி அரேபியா செல்கிறார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்