Skip to main content
விதிமீறிய கனரக வாகனமோட்டிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

விதிமீறிய கனரக வாகனமோட்டிகள் - 87 அழைப்பாணைகள் தரப்பட்டன

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் போக்குவரத்துக் காவல்துறையும் நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA) விதிமீறிய கனரக வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க நடத்திய சோதனையில் 87 அழைப்பாணைகள் தரப்பட்டன.

இம்மாதம் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 192 கனரக வாகனங்கள் சோதிக்கப்பட்டன.

வேக வரம்பைத் தாண்டி வாகனம் ஓட்டியது, சாலையின் இடது பக்கத்தில் ஓட்டாதது, வாகனமோட்டும்போது திறன்பேசிகளைப் பயன்படுத்தியது, வாகனம் ஏந்திச் செல்லும் பாரத்தைக் கயிற்றால் அல்லது மற்ற பொருத்தமான பொருள்களால் கட்டாதது, முன்கண்ணாடியின் வலது மேல் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி வில்லையைத் தெளிவாகக் காட்டத் தவறியது ஆகிய போக்குவரத்துக் குற்றங்களுக்கு அழைப்பாணைகள் கொடுக்கப்பட்டன.

அனுமதிக்கப்படாத வாகனங்களை விரைவுச்சாலைகளில் செலுத்தியது, அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றியிருந்தது போன்ற குற்றங்களும் கண்டறியப்பட்டன.

வேகக் கட்டுப்பாட்டுக் கருவி வில்லை இல்லாமல் சென்ற 24 கனரக வாகனங்கள் பிடிபட்டன.

சிங்கப்பூரில் அனைத்து வாகனமோட்டிகளும் போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று போக்குவரத்துக் காவல்துறை வலியுறுத்தியது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்