Skip to main content
ஓட்டுநர் உரிமமின்றி வாகனமோட்டிய 3 பேர் பிடிபட்டனர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஓட்டுநர் உரிமமின்றி வாகனமோட்டிய 3 பேர் பிடிபட்டனர்

வாசிப்புநேரம் -
ஓட்டுநர் உரிமமின்றி வாகனமோட்டிய 3 பேர் பிடிபட்டனர்

படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

போக்குவரத்துக் காவல்துறை தவறிழைக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

தீவு முழுவதும் நடத்திய 3 நாள் சோதனையில் 276 வாகனங்கள் சோதனைக்காக நிறுத்தப்பட்டன.

வேக வரம்பை மீறியது, இருக்கை வார் அணியாதது உள்ளிட்ட போக்குவரத்துக் குற்றங்களுக்காக 154 அழைப்பாணைகள் விடுக்கப்பட்டன.

நிலப் போக்குவரத்து ஆணையம் சம்பந்தப்பட்ட 99 விதிமீறல்களும் அடையாளம் காணப்பட்டன.

ஓட்டுநர் உரிமமின்றி வாகனமோட்டிய மூவர் பிடிபட்டனர்.

அவர்கள் 34 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

முறையான ஓட்டுநர் உரிமமின்றி வாகனமோட்டிய குற்றத்திற்கு 10,000 வெள்ளி வரை அபராதம், 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்