2023 SEA Gamesஉக்கு நீச்சல் வீர்களை அனுப்பியதில் மோசடி - முன்னாள் பயிற்றுவிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு
This audio is generated by an AI tool.
2023 தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்கு நீச்சல் வீரர்களைத் தேர்வு செய்து அனுப்பியதில் மோசடி புரிந்ததாக முன்னாள் பயிற்றுவிப்பாளர்கள் மூவர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
அவர்கள் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் finswimming எனும் நீரடி நீச்சல் விளையாட்டுக்குத் தகுதிபெற, 6 பேரின் போலி விவரங்களை அளித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் நடந்த finswimming போட்டியில் விளையாட்டாளர்கள் சிறப்பாகச் செய்ததைப் போல் பயிற்றுவிப்பாளர்கள் முடிவுகளை மாற்றியதாகக் காவல்துறையினர் நம்புகின்றனர்.
முடிவுகள் மாற்றப்படவில்லை என்றால் விளையாட்டாளர்கள் 6 பேரும் தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்குத் தகுதிபெற்றிருக்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர் நீரடி விளையாட்டுச் சம்மேளனம் (Singapore Underwater Federation) புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.