Skip to main content
மானபங்கம் செய்த சந்தேகத்தில் மூவர் மீது குற்றச்சாட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மானபங்கம் செய்த சந்தேகத்தில் மூவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
மானபங்கம் செய்த சந்தேகத்தில் மூவர் மீது குற்றச்சாட்டு

(படம்: envato.com)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மானபங்கம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது.

அவர்கள் 30 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை அல்ல.

அவை இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடையே நடந்தன.

இருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்குப் பின் மற்றொருவரைக் காவல்துறை கைது செய்தது.

அதிகாரிகள் கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மூலம் அவரை அடையாளம் கண்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் 23 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று சொல்லப்பட்டது.

மானபங்கம் செய்தது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 3 ஆண்டுச் சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்