Skip to main content
MBS அறையில் தாயும் பிள்ளையும் அடைக்கப்பட்ட சம்பவம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

MBS அறையில் தாயும் பிள்ளையும் அடைக்கப்பட்ட சம்பவம் - மூவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
MBS அறையில் தாயும் பிள்ளையும் அடைக்கப்பட்ட சம்பவம் - மூவர் மீது குற்றச்சாட்டு

AFP/Roslan Rahman

பெண்ணிடம் கொள்ளையடித்து அவரையும் அவரது பிள்ளையையும் ஹோட்டல் அறையில் அடைத்துவைத்ததாக மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் சீனாவைச் சேர்ந்த டூ காய் (Du Kai), லி யுவெ (Li Yue) , ரேன் ஜிலியாங் (Ren Jiliang).

ஆடவர்கள் மூவரும் 29 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

சம்பவம் நேற்று முன்தினம் மரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) ஹோட்டலில் நடந்தது.

நடந்தது என்ன?

பணம் மாற்றும் சேவை வழங்குவதாகச் சொன்ன ஒருவரைச் சந்திப்பதற்காகப் பெண் தமது பிள்ளையுடன் சென்றார்.

அவர்களைச் சந்தித்த ஆடவர் இருவரையும் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.

ஆடவரும் அறையில் இருந்த இன்னொருவரும் பெண்ணை மிரட்டிப் பணத்தைப் பறித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவரிடமிருந்து 50,000 வெள்ளி ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

சந்தேக நபர்கள் பின்னர் பெண்ணையும் அவருடைய பிள்ளையையும் அறையின் மாடத்தில் அடைத்துவிட்டுத் தப்பினர்.

அவர்கள் சீனாவின் ஷங்ஹாய் நகருக்குச் செல்லும் விமானத்தில் ஏறிவிட்டனர்.

தகவல் அறிந்த அதிகாரிகள் விமானம் புறப்படும்முன் தடுத்து நிறுத்தினர்.

சந்தேக நபர்களைக் கைதுசெய்தனர்.

50,000 வெள்ளி ரொக்கத்தையும் மீட்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 20 ஆண்டு வரை சிறையும், குறைந்தபட்சம் 20 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்