Skip to main content
மூன்று வெளிநாட்டு ஊழியர்களின் F1 கனவு நனவானது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

மூன்று வெளிநாட்டு ஊழியர்களின் F1 கனவு நனவானது

வாசிப்புநேரம் -
மூன்று வெளிநாட்டு ஊழியர்களின் F1 கனவு நனவானது

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: IG/Parklabplay

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மூன்று வெளிநாட்டு ஊழியர்களுக்குக் காத்திருந்தது ஓர் இன்ப அதிர்ச்சி...

விளையாட்டாக Instagram பக்கத்தில் பதிவிட்ட காணொளி...

Formula One (F1) கார்ப் பந்தயத்தை நேரில் காணும் வாய்ப்பைத் தந்திருக்கிறது.

விளையாட்டு வசதிகளை அமைத்துக்கொடுக்கும் சிங்கப்பூரின் Parklab Group நிறுவனம் தனது Instagram பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவிட்டிருந்தது.

அதில் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் விளையாடும் இடத்தில் பாடிக் கொண்டே ஆடுகின்றனர்.

"இந்தக் காணொளிக்கு 2,000 விருப்பக் குறிகள் கிடைத்தால் எங்கள் முதலாளி எங்களை F1 கார்ப்பந்தயத்துக்குக் கூட்டிச் செல்வதாகச் சொன்னார்." என்று அவர்கள் பாடி ஆடுகின்றனர்.

எதிர்பார்த்ததைவிட அதிகமாக, காணொளி சுமார் 9,000 விருப்பக்குறிகளைப் பெற்றது.

100,000க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது.

மூவருக்கும் நுழைவுச்சீட்டுகள் கொடுக்கப்படுமா என்று பல இணையவாசிகள், காணொளியின் கருத்துப் பகுதியில் கேட்டிருந்தனர்.

அது பற்றி விவரமறிய 'செய்தி', Parklab Group நிறுவனத்தை நாடியது.

ஊழியர்களுக்கு F1 கார்ப்பந்தயத்துக்குச் செல்ல நுழைவு சீட்டுகளை வாங்கிவிட்டதை நிறுவனம் உறுதி செய்தது.

ஊழியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தங்கள் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக Parklab Group சொன்னது.

அவர்களில் இருவர் குழுக்களை நிர்வகித்து, மற்றவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்; மூன்றாமவர் நம்பிக்கைக்குரிய ஊழியர் என்றது நிறுவனம்.

விளையாட்டாக வெளியிடப்பட்டாலும் அவர்களது கடின உழைப்பை அங்கீகரிக்க இது வாய்ப்பாக அமைந்தது என்றது நிறுவனம்.

F1 பந்தயத்தை முதலாளியுடன் சென்று மூன்று ஊழியர்களும் கண்டு மகிழவிருப்பதாக நிறுவனம் கூறியது.

முதலாளியும் முதல் தடவை செல்லவிருப்பதால் நால்வருக்கும் இது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்றது நிறுவனம்.

கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களைப் பொதுவெளியில் அறிமுகம் செய்யவும் காணொளி வாய்ப்பளித்ததாக நிறுவனம் குறிப்பிட்டது.







 
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்