வாடிக்கையாளர்களை ஏமாற்ற முயற்சி - இணையத்தள விற்பனை நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை
படம்: CCS
வாடிக்கையாளர்களை ஏமாற்றி, அவசரமாகப் பொருள்களை வாங்க வைக்க சில உத்திகளைப் பயன்படுத்திய 3 இணைய விற்பனை நிறுவனங்கள் மீது சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் (CCCS) நடவடிக்கை எடுத்துள்ளது.
Boarding Gate கடைகளை நடத்தும் Seager Inc, Origin Sleep எனும் மெத்தை விற்பனை நிறுவனம், Light In The Box ஆகிய மூன்றும் ஏமாற்று உத்திகளைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
📍பொருளை இதுவரை எத்தனை பேர் வாங்க ஆசைப்பட்டுள்ளனர்
📍பொருளுக்கான சலுகைகள் முடிவடையப்போவதைக் காட்டும் நேரங்காட்டி
📍கழிவுச் சலுகை
📍பொருள்கள் விற்றுத் தீரப்போகின்றன (almost sold out) என்ற எச்சரிக்கை வாசகங்கள்
ஆகிய விவரங்கள் விற்பனைத் தளத்தில் இருக்கின்றன.
ஆனால் அவற்றில் உண்மையில்லை; போலியாக உருவாக்கப்பட்டவை என்று ஆணையம் சொன்னது.
இந்த ஏமாற்று உத்திகள் மிகவும் ஆபத்தானவை என்று ஆணையம் கூறியது.
நடவடிக்கைக்குப் பிறகு மூன்று நிறுவனங்களும் அந்த அம்சங்களை அகற்றியுள்ளன. எதிர்காலத்தில் இது போன்று மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யப்போவதாகவும் கூறியுள்ளன.