ICA இணையத்தளத்தில் வீட்டு முகவரியை மாற்றுவதில் முறைகேடு - மூவர் மீது குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: ICA)
குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் (ICA) இணையச் சேவை வாயிலாக அனுமதியின்றி வீட்டு முகவரியை மாற்ற முயற்சி செய்ததன் தொடர்பில் 3 சிங்கப்பூரர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இங் வே சாங் (Ng Wei Chang), யுவேன் முன் ஃபே (Yuen Mun Fei), கோ ஹோங் யான் (Koh Hong Yan) ஆகியோர் கணினியின் தவறான பயன்பாடுச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்குகின்றனர்.
ICA இணையத்தளத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஊடுருவதற்காக 30 வயது இங் தனிநபர் அடையாள எண்ணை (PIN) வெளியிட்டதாக நம்பப்படுகிறது.
38 வயது யுவேன், கோயின் தனிநபர் அடையாள விவரங்களை வெளியிட்டதற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
SingPass விவரங்களைச் சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு வெளியிட்டதற்காக 26 வயது கோ மீது குற்றச்சாட்டு பதிவானது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூவாண்டு வரையிலான சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மூவரும் விசாரணைக்காகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அடுத்த மாதம் (பிப்ரவரி 2025) 24ஆம் தேதி நீதிமன்றத்துக்குத் திரும்புவர்.

ஆதாரம் : CNA