Skip to main content
ஆசியான் கிண்ணக் காற்பந்துப் போட்டி அரையிறுதி ஆட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆசியான் கிண்ணக் காற்பந்துப் போட்டி அரையிறுதி ஆட்டம் - நுழைவுச்சீட்டுகள் 6 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன

வாசிப்புநேரம் -
ஆசியான் கிண்ணக் காற்பந்துப் போட்டி அரையிறுதி ஆட்டம் - நுழைவுச்சீட்டுகள் 6 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன

(படங்கள்: Instagram/Football Association of Singapore)

ஆசியான் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வியட்நாமுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நடைபெறவிருக்கும் அரையிறுதி ஆட்டத்தைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டுகள் 6 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன.

ஜாலான் புசார் (Jalan Besar) விளையாட்டரங்கில் வரும் வியாழக்கிழமை (26 டிசம்பர்) ஆட்டம் நடைபெறவிருக்கிறது.

நுழைவுச்சீட்டுகள் இப்போது இணையத்தில் இரட்டிப்பு விலையில் விற்கப்படுகின்றன.

மறுவிற்பனையாளர்களிடமிருந்து நுழைவுச்சீட்டுகளை வாங்க வேண்டாம் என சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம் எச்சரித்துள்ளது.

அவ்வாறு வாங்கும்போது விளையாட்டரங்கிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்படலாம் என அது தெரிவித்தது.

நுழைவுச்சீட்டுகளை வாங்குவதற்காக நேற்று இரவிலிருந்தே பலர் வரிசை பிடித்து நின்றனர்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்