TikTok ஆட்குறைப்பு - நிறுவனம் முறையாகத் தகவல் வழங்கியிருக்கிறது: மனிதவள அமைச்சு
வாசிப்புநேரம் -
படம்: AFP/PATRICK T. FALLON
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
TikTok நிறுவனம் ஒட்டுமொத்த வர்த்தகச் சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது குறித்துத் தெரியும் என்று மனிதவள அமைச்சின் முறையான ஆட்குறைப்பு, வேலைவாய்ப்புப் பணிக்குழு தெரிவித்திருக்கிறது.
அந்த நிறுவனம் ஆட்குறைப்பு பற்றி விதிமுறைக்கு ஏற்ப முறையாகத் தகவல் தெரிவித்திருப்பதாகவும் பணிக்குழு சொன்னது.
தாம் கேட்ட கேள்விக்குப் பணிக்குழு பதில் தந்ததாக 8World செய்தித்தளம் குறிப்பிட்டது.
ஆட்குறைப்புச் செய்யப்பட்டவர்களுக்குப் புதிய வேலை வாங்கித் தருவதே தனது தலையாயப் பணி என்றும் அது தெரிவித்தது.
இதற்குமுன் TikTok நிறுவனம் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் Dublin நகரில் உள்ள அதன் ஐரோப்பிய நடுவத்திலும் வர்த்தகச் சீரமைப்புப் பணியை மேற்கொள்வதாகத் தகவல்கள் கூறின.
பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை பற்றி TikTok நிறுவனம் இதுவரை விவரம் வெளியிடவில்லை.

ஆதாரம் : Others/8world