சிங்கப்பூரில் மின்சாரத்தடை ஏற்பட்டால் அடுத்து என்ன செய்வது?

envato elements
சிங்கப்பூரில் மின்சாரத்தடை ஏற்படும்போது அடுத்து என்ன செய்யவேண்டும்?
சிங்கப்பூரர்கள் தங்களை எப்படித் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும்?
எரிசக்திச் சந்தை ஆணையம் (EMA), Nexus, தற்காப்பு அமைச்சு ஆகியவை இணைந்து அடுத்த மாதம் (பிப்ரவரி 2025) 15ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை Exercise SG Ready பயிற்சியை நடத்தவிருக்கிறது.
மின்சாரத் தடை ஏற்பட்டால் குடும்பங்களும் தனிநபர்களும் என்ன செய்யலாம்?
எரிசக்திச் சந்தை ஆணையம் அது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதோ சில குறிப்புகள்...
⚡ அவசரநிலைப் பையைத் தயார்ப்படுத்திக்கொள்ளலாம். அதில் மின்கலன்களால் இயங்கும் மின்விளக்கு, வானொலி, முதலுதவிப் பெட்டி போன்ற முக்கியமான பொருள்களை மட்டும் வைத்திருப்பது நல்லது.
⚡ அவசரகால உதவி எண்களைக் கையில் வைத்திருக்கவேண்டும். உதவி தேவைப்படும்போது எளிதில் நாடலாம்.
⚡ பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கவேண்டும். அனைத்து மின்னிலக்கச் சாதனங்களையும் அணைப்பது நல்லது. மின்சாரம் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பும்போது பாதிப்பு ஏற்படாது.
⚡ ஒருவேளை மின்தூக்கியில் சிக்கிக்கொண்டால் அத்தியாவசியப் பராமரிப்புச் சேவையை அழைக்கவேண்டும். அந்தத் தொலைபேசி எண்ணை மின்தூக்கியில் காணலாம்.
⚡ முக்கிய அறிவிப்புகளுக்கு SP குழுமத்தின் சமூக ஊடகத் தளங்களை நாடலாம்.
⚡ தேவைப்பட்டால் SP குழுமத்தின் சேவை நிலைய நேரடித் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
⚡ உயிருக்கு ஆபத்து நேரிடும் சூழ்நிலை ஏற்பட்டால் 995, 999 ஆகிய அவசரத் தொலைபேசி எண்களை அழைக்கலாம்.
நிறுவனங்கள் என்ன செய்யலாம்?
⚡ மின்சாரத்தடை ஏற்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஊழியர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி நடத்தலாம்.
⚡ மின்சாரத்தடை ஏற்படும்போது அனைவரின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கவேண்டும்.
⚡ உடனடியாக அனைவரிடமும் தகவல் கொடுத்து அவர்களைத் தயார்ப்படுத்துவது அவசியம்.
⚡ வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு விவரம் தரவேண்டும்.