அன்று Titanic மூழ்கியதை இன்று சிங்கப்பூரில் பார்க்கலாம்

(படம்: www.expo-titanic.com)
1912ஆம் ஆண்டு...
இங்கிலாந்திலிருந்து புறப்பட்டது டைட்டானிக் (Titanic) கப்பல்.
டைட்டானிக்கின் அந்த முதல் பயணம்..இறுதி பயணமானது...
பனிப்பாறை மீது கப்பல் மோதியது...
கப்பலில் இருந்த சுமார் 2,500 பேரில் 1,500 பேர் மாண்டனர்.
கப்பலும் ஆழ்கடலுக்குள் மூழ்கியது...
டைட்டானிக்கின் கதையைக் கண்முன் காணலாம்..சிங்கப்பூரில்.
அடுத்த மாதம் தொடங்கும் கண்காட்சியில் கப்பலின் கட்டுமானத்திலிருந்து அதன் உள்ளமைப்பு வரை காணலாம்.
அது எவ்வாறு மூழ்கியது என்பதையும் அறியலாம்.
கப்பல் மூழ்கிக் கிடக்கும் இடத்தை மெய்நிகர் தொழில்நுட்பம் வழி பார்க்கமுடியும்.
கப்பலில் இருந்த 300க்கும் அதிகமான பொருள்கள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
அமெரிக்கா, டென்மார்க் ஆகிய இடங்களில் இருந்த டைட்டானிக் கண்காட்சி முதல் முறையாக ஆசியாவுக்கு வருவதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
நுழைவுச்சீட்டுகள் அடுத்த வியாழக்கிழமை (10 ஜூலை) விற்பனைக்கு வரும்.
நுழைவுச்சீட்டுகளின் விலை 23.90 வெள்ளியில் தொடங்கும்.