Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பழைய தமிழ்ச்சொற்கள் மறக்கப்படக்கூடாது, மறைந்துவிடக்கூடாது... மாணவர்களுக்கான "தமிழோடு உறவாடு" போட்டி...

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, 'தமிழோடு உறவாடு 2023: சொல் அழகு' எனும் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது சிற்பிகள் மன்றம்.

போட்டி இம்மாதம் (ஏப்ரல் 2023) 15ஆம் தேதி நடைபெற்றது. இணையத்தில் இடம்பெற்ற அந்த மின்னிலக்கப் போட்டியில் 50 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தலைமுறைகள் கடந்து செல்லச்செல்லத் தமிழில் புழக்கத்தில் இருக்கும் சொற்களின் எண்ணிக்கை குறைந்துவருவது கவனிக்கப்பட்டது.

முன்பு தாத்தா, பாட்டிகள் பயன்படுத்திய சொற்கள் இப்போது புழக்கத்தில் இல்லை. ஆனால் அவற்றைத் தமிழர்கள் என்றும் மறந்துவிடக்கூடாது, அந்தச் சொற்கள் மறைந்துவிடக்கூடாது என்று விரும்பியது ஏற்பாட்டுக் குழு.

எனவே தமிழ் மாணவர்களிடையே கூடுதல் தமிழ்ச்சொற்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தத் 'தமிழோடு உறவாடு' போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறியது சிற்பிகள் மன்றம்.

வளமான, பழைமைவாய்ந்த தமிழ்ச் சொற்களைப் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்; அதே நேரத்தில் தமிழுடைய சொல் அழகை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தைப் போட்டி நிறைவேற்றியதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்