சமூகத்தின் வலுவான குரலாகச் சேவையாற்றினால், ஊடகத்துக்கு மக்கள் ஆதரவு உண்டு: அமைச்சர் ஜோசஃபின் தியோ
வாசிப்புநேரம் -

படம்: தமிழவேல்
சிங்கப்பூரில் தமிழ், மலாய், சீன ஊடகங்கள் இருப்பது தற்செயலான ஒன்றல்ல.
ஊடகங்கள், சமூகம், அரசாங்கம் ஆகியவை மேற்கொண்ட கவனமான கொள்கை வடிவமைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் பலன் அது என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ கூறியிருக்கிறார்.
தமிழ் முரசு நாளேட்டின் 90ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் பேசினார்.
தமிழ், சீன, மலாய் ஊடகங்கள் மக்களின் தேவைகளை உணர்ந்து அவற்றின் சமூகங்களுக்குத் தொடர்ந்து குரல்கொடுத்தால் வாசகர்களின் ஆதரவைப் பெறலாம் என்றார் அவர்.
ஊடகம், சமூகம், அரசாங்கம் ஆகிய தரப்பினரின் கூட்டுமுயற்சியுடன் வெவ்வேறு மொழி சார்ந்த ஊடகங்கள் சிங்கப்பூரின் பண்புநலன்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் இருப்பதாகத் திருவாட்டி தியோ பாராட்டினார்.
நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அதிபர் தர்மனும் அமைச்சர் தியோவும் தமிழ் முரசின் 90ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் சிறப்புப் புத்தகத்தை வெளியிட்டனர்.
SPH ஊடக அறக்கட்டளைக்கு நிதி வழங்கும்போது மற்ற மொழி ஊடகத்துக்கும் ஆதரவு நல்க வேண்டும், அவற்றை வலுப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை அரசாங்கம் விதித்ததாக அமைச்சர் தியோ தமது உரையில் தெரிவித்தார்.
காலனித்துவக் காலம்தொட்டு முரசு நாட்டு நிர்மாணப் பயணத்தில் பெரும் பங்காற்றியிருப்பதாகத் திருவாட்டி தியோ குறிப்பிட்டார்.
சமூகத்தின் நாடித்துடிப்பை உணர்ந்து, சமூகத்தின் வலுவான குரலாக விளங்கி, சமூகத்துக்குத் தவறாது சேவையாற்றினால் மக்களின் ஆதரவு ஊடகத்துக்கு உண்டு என்றார் அமைச்சர் தியோ.

ஆதாரம் : Others