தோ பாயோ ரயில் நிலையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சில தருணங்களின் சுவரோவியங்கள்...

(கோப்புப் படம்: TODAY)
தோ பாயோ ரயில் நிலையத்தில், அந்த வட்டாரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சில தருணங்கள் ஒரு சுவரோவியமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
அதுபோன்ற மொத்தம் 35 சுவரோவியங்களைத் தனது ரயில் நிலையங்களில் நிறுவவுள்ளது SMRT நிறுவனம்.
தனது 35ஆம் ஆண்டுநிறைவை முன்னிட்டு அந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது ரயில் நிறுவனம்.
நாட்டின் முதல் ரயில் நிலையங்களில் ஒன்று தோ பாயோ ரயில் நிலையம்.
அங்கு, வட்டாரம் கண்ட பரிணாம வளர்ச்சி அழகிய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
பண்ணை நிலமாக இருந்த வட்டாரம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் வடிவமைத்து, கட்டப்பட்ட முதல் நவீன நகரமாக உருவெடுத்தது.
கலையையும் வரலாற்றையும் பொதுமக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே ஓவியரின் எண்ணம்.