Skip to main content
நூற்றாண்டைத் தொட்டுள்ள மலேசிய
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நூற்றாண்டைத் தொட்டுள்ள மலேசிய - சிங்கப்பூர்ப் பாலம்!

வாசிப்புநேரம் -
நூற்றாண்டைத் தொட்டுள்ள மலேசிய - சிங்கப்பூர்ப் பாலம்!

(படம்: AFP)

மலேசிய - சிங்கப்பூர்ப் பாலம் திறக்கப்பட்டு இன்றோடு நூறு ஆண்டுகளாகி விட்டன.

அந்தப் பாலம் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்டது. விறுவிறுப்பான போக்குவரத்து இடம்பெறும் அனைத்துலக எல்லைச் சோதனைச் சாவடிகளில் அதுவும் ஒன்று.

நூற்றாண்டுப் பெருமைமிக்க பாலம் குறித்த நினைவுகளைச் 'செய்தி'யிடம் பகிர்ந்து கொள்கிறார் நாள்தோறும் அங்கிருந்து சிங்கப்பூர் வந்து செல்லும் ரமதான்.

"ஏறக்குறைய 15 ஆண்டுகளாகப் பாலத்தைப் பயன்படுத்தி வருகிறேன். அன்றாடம் மோட்டார் சைக்கிளில் ஜொகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றுவர இந்தப் பாலம் கைகொடுக்கிறது. பாலத்துக்கு இன்றுடன் 100 ஆண்டுகளாகிறது என்பதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் பொருளாதாரத்துக்கு இது வாழ்வாதாரமாக இருக்கிறது. இரு நாடுகளுக்கான உறவுப் பாலமாகவும் இது அமைந்துள்ளது. பாலம் அந்தளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது" என்றார் அவர்.

ஜொகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் மற்றொரு மலேசியரான சேவியர் ரத்னம் தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

"கடந்த 13 ஆண்டுகளாகச் சாங்கி விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறேன். சாலை நெரிசல்கள் அவ்வப்போது ஏற்பட்டாலும் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்ல இந்த உட்லண்ட்ஸ் பாலம் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எனக்கு நிரந்தர வேலை நேரம் இல்லை. 3 நேரங்களில் வேலை செய்வதால் நெரிசல் பெரிய பிரச்சினையாக இருந்ததில்லை. மாறாகக் குறுகிய நேரத்தில் நான் சாங்கி விமான நிலையம் சென்றடையப் பாலம் உதவுகிறது. இந்தப் பாலத்தின் நூற்றாண்டு தினத்தை எண்ணி மகிழ்கிறேன்" என்றார் அவர்.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நெருக்கமான உறவு, மக்கள் தொடர்பு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது மலேசிய - சிங்கப்பூர்ப் பாலம்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்