Tokenize Xchange மின்னிலக்க நாணயத் தளத்தின் மீது விசாரணை
வாசிப்புநேரம் -
படம்: CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனைத் தளமான Tokenize Xchange மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
காவல்துறையும் சிங்கப்பூர் நாணய வாரியமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை அதனைத் தெரிவித்தது.
Tokenize Xchangeஐ நிர்வகிக்கும் நிறுவனமான AmazingTech, அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள மற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின்மீது
மோசடிப் பரிவர்த்தனைகளிலும் மேலும் சில குற்றங்களிலும் ஈடுபட்ட சந்தேகத்தில் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்துவதாக அறிக்கை குறிப்பிட்டது.
Tokenize Xchangeஇல் தங்கள் கணக்கிலிருந்து பணம் பெறுவதற்கும், கட்டணங்களைச் செலுத்துவதற்கும் நிறுவனம் முறையான சேவை வழங்கவில்லை என்று வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
முன்னதாக 2019ஆம் ஆண்டுக் கட்டண சேவைகள் சட்டத்திலிருந்து AmazingTech நிறுவனம் விலக்கு பெற்றிருந்தது.
Tokenize Xchange தளத்தை இயக்குவதற்கான நிறுவனத்தின் விண்ணப்பத்தைச் சிங்கப்பூர் நாணய வாரியம் பரிசீலித்தது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்ற மாதம் 14ஆம் தேதி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட விலக்கு முடிவுற்றது.
AmazingTech நிறுவன இயக்குநர் ஹொங் சீ யூ மீது (Hong Qi Yu) மோசடி வர்த்தகம் புரிந்ததாக நேற்றுக் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆதாரம் : CNA