Skip to main content
தடுப்பூசியால் மறதிநோய் அபாயம் குறையுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தடுப்பூசியால் மறதிநோய் அபாயம் குறையுமா? - விளக்கம் தரும் நிபுணர்கள்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தடுப்பு மருந்தால் மறதிநோய் (Dementia) ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆக்ஸ்பர்ட் (Oxford) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் அதனை உறுதிசெய்வதற்குப் போதுமான ஆதாரம் இல்லை என்று சிங்கப்பூரில் உள்ள நிபுணர்கள் சொல்கின்றனர்.

ஆய்வில் சுமார் 437,000 பேர் கலந்துகொண்டனர்.

Shingles எனும் அம்மை நோய்க்கான Shingrix தடுப்பூசி நினைவாற்றல் இழப்பு ஏற்படும் அபாயத்தை 18 விழுக்காடு குறைப்பதாக நம்பப்படுகிறது.

Respiratory Syncytial Virus எனும் நோய்க்கிருமிக்கு எதிரான Arexvy தடுப்பூசியால் அது 29 விழுக்காடு குறைகிறது என்று கண்டறியப்பட்டது.

தடுப்பூசிகளில் உள்ள AS01 என்ற சாரம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, 18 மாதங்கள் வரை நினைவாற்றல் இழப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும் என்று கருதப்படுகிறது.

நினைவாற்றல் இழப்பின் அறிகுறிகள் வெளிப்பட10 முதல் 20 வருடங்கள் வரை ஆகும் என்பதால் கண்டுபிடிப்புகள் முழுமை பெறவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீண்டகால ஆய்வுகளுக்குப் பிறகே கண்டுபிடிப்புகளை உறுதி செய்ய முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சமச்சீர் உணவு, வழக்கமான உடற்பயிற்சி உள்ளிட்டவை நோயின் அபாயத்தைக் குறைக்கலாம். செவிப்புலனையும் கண் பார்வையையும் பேணிக் காப்பதும் அவசியம் என்று நிபுண்ர்கள் கூறினர்.

தூக்கமின்மை, மதுப்பழக்கம் ஆகியவற்றால் நோயின் அபாயம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்