உலகின் சிறந்த 100 மருத்துமனைகளில் மூன்று சிங்கப்பூர் மருத்துவமனைகள்!
This audio is generated by an AI tool.
உலகில் சிறந்த சேவை வழங்கும் 100 மருத்துவமனைகளின் பட்டியலில் மூன்று சிங்கப்பூர் மருத்துவமனைகள் இடம்பிடித்துள்ளன.
சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை கடந்த ஆண்டிலிருந்து ஓரிடம் இறங்கி 10ஆவது இடத்தை இவ்வாண்டு பிடித்துள்ளது.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு 73ஆவது இடம் கிடைத்தது.
92ஆவது இடத்தில் டான் டொக் செங் மருத்துவமனை.
Newsweek நிறுவனமும் உலகத் தரவுத் தளமான Statistaவும் இணைந்து 8ஆம் ஆண்டாகப் பட்டியலை வெளியிட்டுள்ளன.
ஜப்பான், தென்கொரியா, மலேசியா, தாய்லந்து, அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட 32 நாடுகளில் இயங்கும் மருத்துவமனைகளை ஆராய்ந்து தரநிலைகள் வழங்கப்படுகின்றன.
மக்கள் தொகை, மக்களின் ஆயுட்காலம், வாழ்கைத்தரம், மருத்துவமனைகள் கையாளும் நோயாளிகளின் எண்ணிக்கை முதலியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மருத்துவமனையும் மதிப்பிடப்படுகிறது.
இந்த முறை 2,500க்கும் அதிகமான மருத்துவமனைகள் ஆராயப்பட்டன.
முதல் மூன்று இடங்களில் மாயோ மருந்தகம்- ரோசஸ்டர் (Rochestor), டொரண்டோ (Toronto) பொது மருத்துவமனை, கிளிவ்லேண்ட் (Cleveland) மருந்தகம் ஆகியவை வந்தன.