Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உடற்குறையுள்ளோருக்கான Toyota உலகக் கிண்ண நீச்சல் போட்டி

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உடற்குறையுள்ளோருக்கான Toyota உலகக் கிண்ண நீச்சல் போட்டி

YouTube/Paralympic Games

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் உடற்குறையுள்ளோருக்கான Toyota உலகக் கிண்ண நீச்சல் போட்டி தொடங்கியிருக்கிறது. 

ஆசியாவில் அந்தப் போட்டி நடத்தப்படுவது இதுவே முதன்முறை.  

75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 நீச்சல் வீரர்கள் போட்டியிடுகின்றனர்.

வரும் 27ஆம் தேதிவரை போட்டி நீடிக்கும்.

சிங்கப்பூர் உடற்குறையுள்ள நீச்சல் வீரர் காலஞ்சென்ற கொலீன் சூனுக்குத் (Colin Soon) தொடக்க விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கலாச்சார, சமூக, இளையர் துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ (David Neo) போட்டிகளை ஏற்று நடத்துவது மட்டுமே போட்டி அல்ல என்று கூறினார்.

அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறை, முன்னேற்றம் ஆகியவற்றின் கொண்டாட்டமாகவும் அது திகழ்கிறது என்றார் அவர். 

உடற்குறையுள்ளோர்  விளையாட்டுகளின் மேம்பாட்டுக்கு இன்னும் நிறைய நாடுகள் ஆதரவளிப்பதைப் பார்க்க முடிவதாய் திரு நியோ கூறினார்.

இன்றைய நிகழ்ச்சியில் உலகின் சிறந்த வீரர்கள் அணி வகுத்தனர். 

உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக்கில் 7 முறை தங்கம்  வென்ற நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ (Yip Pin Xiu) சிங்கப்பூரைப் பிரதிநித்தார். 

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்