Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

TraceTogether கருவிகளின் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது

வாசிப்புநேரம் -
TraceTogether கருவிகளின் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது

(படம்: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் TraceTogether கருவிகளுக்கான தேவை குறைந்திருப்பதைத் தொடர்ந்து அவற்றின் விநியோகம் குறைக்கப்பட்டிருக்கிறது. 

சிங்கப்பூரில் இருக்கும் 108 சமூக மன்றங்கள், சமூக நிலையங்களில் தொடர்ந்து கருவிகளைப் பெறலாம். ஆனால் அவற்றை சனிக்கிழமை முதல் திங்கட்கிழமைவரை மட்டுமே பெற்றுக்கொள்ளமுடியும். 

கடைத்தொகுதிகளில் இருக்கும் TraceTogether இயந்திரங்களும் ஆகஸ்ட் மாதத்தோடு மூடப்படும். 

புதிதாக TraceTogether கருவி வேண்டும் அல்லது ஏற்கனவே இருப்பது பழுதாகிவிட்டது என்றால் சமூக மன்றம், சமூக நிலையத்தில் கருவிகள் வழங்கும் நேரத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம். 

சமூக மன்றத்திலும் சமூக நிலையத்திலும் இருக்கும் இயந்திரத்திலும் பழைய கருவிக்குப் பதில் புதிய கருவியைப் பெறலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa