Skip to main content
TraceTogether கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பதில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

TraceTogether கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பதில்

வாசிப்புநேரம் -
TraceTogether கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பதில்

(கோப்புப் படம்: Government Technology Agency of Singapore)

TraceTogether திட்டம் குறித்த கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung) பதிலளித்துள்ளார்.

அந்தத் தொழில்நுட்பம் மீண்டும் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வியும் அவரிடம் முன்வைக்கப்பட்டது.

திட்டத்தை நிறுத்தியபோது அதிலிருந்த அனைத்துப் பதிவுகளும் நீக்கப்பட்டுவிட்டன; அதனால் தற்போது தரவுகள் ஏதும் இல்லை என்றார் திரு ஓங்.

TraceTogether பயன்படுத்தப்பட்ட காலக்கட்டத்தில் அதன்மூலம் தனிமைப்படுத்துவதற்கு ஏறக்குறைய 600,000 ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன; அது கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்த உதவியது; நோய்த்தொற்றைத் தடுப்பதிலும் உயிர்களைக் காப்பதிலும் முக்கிய பங்காற்றியது என்றார் அவர்.

SARS நோய் சிங்கப்பூரில் பெரும்பாலும் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் மட்டுமே பரவியது.  கோவிட்-19 பரவல் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் பாதித்தது.

அதனால் கோவிட்-19 சம்பவங்களைக்  கட்டுப்படுத்துவதற்குத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

சிங்கப்பூரில் மிகக் குறைவான கோவிட்-19 இறப்பு விகிதங்கள் பதிவாகியதையும் திரு ஓங் சுட்டினார்.

TraceTogether திட்டத்துக்கான செலவு சுமார் $180 மில்லியன்.

செயலியை உருவாக்கவும் அதை மக்களுக்கு வழங்கவும் அதிக செலவானதாகத் திரு ஓங் விளக்கினார்.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்