சிங்கப்பூரில் குப்பை போடுவோர் எண்ணிக்கையில் சரிவு
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உள்ள ஒரு குப்பைத் தொட்டி(படம்: Francine Lim, channelnewsasia.com)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் குப்பை போடுவோர் குறைந்திருப்பதாகத் தெரிகிறது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) அதுபற்றி விளக்கினார்.
அண்மையில் குப்பை போடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் டான் (Dennis Tan) கேள்வியெழுப்பினார்.
அமைச்சர் கிரேஸ் ஃபூ அதற்குப் பதில் தந்தார்.
குப்பை போடுவதற்கு எதிராக தேசியச் சுற்றுப்புற அமைப்பு எடுக்கும் நடவடிக்கை குறைந்திருக்கிறது.
2023ஆம் ஆண்டு அமைப்பு 18,700 முறை நடவடிக்கை எடுத்தது.
கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 13,300.
இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள அனைவரும் சமூகப் பொறுப்புடன் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.
அதற்குக் குடியிருப்பாளர்கள், பள்ளிகள், நகரமன்றம் உள்ளிட்ட தரப்புகளுடன் தேசியச் சுற்றுப்புற அமைப்பு இணைந்து பணியாற்றுவதாக அமைச்சர் ஃபூ கூறினார்.

ஆதாரம் : Mediacorp Seithi