Skip to main content
$25 மில்லியன் சொகுசுப் பொருள் மோசடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

$25 மில்லியன் சொகுசுப் பொருள் மோசடி - மனைவிக்கு உதவிய சிங்கப்பூரருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
சொகுசுப் பொருள் மோசடியில் உதவிய ஆடவருக்கு 5 ஆண்டு, 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரரான 30 வயது பி ஜியாபெங்கும் (Pi Jiapeng) தாய்லந்தைச் சேர்ந்த அவரது மனைவி பன்சுக் சிரிவிபாவும் (Pansuk Siriwipa) Tradenation என்கிற அந்த வர்த்தகத்தைத் தொடங்கினர்.

சொகுசுப் பொருள்களை மறுவிற்பனை செய்வதில் இருவரும் வாடிக்கையாளர்களிடம் சுமார் 25 மில்லியன் வெள்ளியை மோசடி செய்தனர்.

பி ஜியாபெங் மோசடி வர்த்தகம், பண மோசடி, இயக்குநராகக் கடமை தவறியது ஆகிய 3 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

மேலும் 4 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

அவரும் அவரது மனைவியும் 2021ஆம் ஆண்டு Tradenation நிறுவனத்தைத் தொடங்கினர்.

வாடிக்கையாளர்கள் பொருள்களுக்கான முழு பணத்தைக் கட்டிய பிறகு அவர்கள் பொருளை வாங்கி விநியோகம் செய்வர்.

அவ்வாறு 178 வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் 25 மில்லியன் வெள்ளியை அவர்கள் பெற்றனர்.

ஆனால் சொன்னபடி பொருள்களை விநியோகிக்கவில்லை.

காவல்துறை விசாரணையின்போது இருவரும் சட்டவிரோதமாகச் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குத் தப்பினர்.

சென்ற ஆண்டு (2024) பன்சுக் சிரிவிபாவுக்கு 14 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்