Skip to main content
விளையாட்டுத்தனமாக செயலிகள் மூலம் முதலீடு செய்யும் இளையர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

விளையாட்டுத்தனமாக செயலிகள் மூலம் முதலீடு செய்யும் இளையர்கள்- எச்சரிக்கும் நிபுணர்கள்

விளையாட்டுத்தனமாக செயலிகள் மூலம் முதலீடு செய்யும் இளையர்கள்- எச்சரிக்கும் நிபுணர்கள்

வாசிப்புநேரம் -
விளையாட்டுத்தனமாக செயலிகள் மூலம் முதலீடு செய்யும் இளையர்கள்- எச்சரிக்கும் நிபுணர்கள்

படங்கள்: REUTERS

வர்த்தகச் செயலிகள் (Trading apps) மீது இளையர்களின் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

எளிதில் லாபம் ஈட்டும் ஆசையால் அபாயத்தை அறிந்து கொள்ளாமலேயே அதிக நேரம் செலவிட்டுப் பலரும் அவற்றில் முதலீடு செய்கின்றனர்.

அண்மையில் Franklin Templeton நிறுவனம்
சிங்கப்பூரில் அது குறித்து ஆய்வு நடத்தியது.

சுமார் 500 இளையர்கள் அதில் கலந்து கொண்டனர். அவர்களில் 80 விழுக்காட்டினர் வர்த்தகச் செயலிகளில் முதலீடு செய்துள்ளதாகத் தெரியவந்தது.

Related article image

முதலில் லாபத்தைக் கொடுக்கும் பின்னர் அது பயனீட்டாளர்களை அதிகமாக முதலீடு செய்ய வைக்கும்.

பிறகு போட்ட முதலீடுகளை எடுக்க முடியாமல் ஏமாற்றும் என்கிறார் பொருளியல் நிபுணர் திரு. சீனி ஜாஃபர் கனி.

சிங்கப்பூரில் விதிகள் கடுமையானவை அதனால் சில வர்த்தகச் செயலிகளுக்குத்தான் முறையான உரிமங்கள் உள்ளன.
அவற்றில் முதலீடு செய்வதற்கு பயனீட்டாளர்களுக்கு அனுபவமும் அந்தத் துறை சார்ந்த அறிவும் முக்கியம்.


Related article image
படங்கள்:  REUTERS 

இணையத்தில் வரும் எல்லாச் செயலிகளிலும் பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் இருப்பதில்லை என்கிறார் இணைய பாதுகாப்பு நிர்வாகி கணேஷ் நாராயணன்.

Related article image

செயலிகள், இணையப் பாதுகாப்பு முத்திரைகளைக் கொண்டுள்ளனவா என்பதைக் கருத்தில் கொண்டு இளையர்கள் அவற்றைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றார் திரு. கணேஷ்.

எளிதில் பணம் கிடைக்கும் என்று நம்பவைத்து பல இணைய மோசடிகள் நடப்பதையும் அவர் சுட்டினார்.

அஸ்வின் - 18 வயது (பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் )

நண்பர்கள் மூலம் வர்த்தகச் செயலிகள் பற்றித் தெரிந்துகொண்டேன்.

விடுமுறைக் காலத்தில் அவ்வளவாக வெளியே செல்லாததால் வீட்டில் ஓய்வு நேரங்களில் அந்தச் செயலியைப் பயன்படுத்தினேன்.

முதலில் 50 வெள்ளி முதலீடு செய்தேன் அது 400-ஆக மாறியது.

பிறகு அதைப் பிரித்துப் பிரித்து முதலீடு செய்தேன் ஆனால் அதில் அதிக நட்டம் ஏற்பட்டது.

என்னை அறியாமலேயே அதிக நேரம் அதில் செலுத்தத் தொடங்கினேன், ஒரு நாள் நல்ல லாபம் மறுநாள் பெரும் நட்டம்.

சற்று பயம் வந்ததாலும் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியதாலும் இப்போது அதைப் பயன்படுத்துவதில்லை.

சதீஸ், 18 வயது (பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் )

நண்பர்கள் மூலம் வர்த்தகச் செயலிகள் பற்றித் தெரிந்து கொண்டேன்.

சில செயலிகளில் பயிற்சிகள் இருக்கும் அதற்கு எந்த முதலீடும் தேவையில்லை அதனால் இப்போது அதைச் செய்து வருகிறேன்.

பயிற்சியில் தேறினால் முதலீடு செய்வேன் இல்லையென்றால் நிறுத்திக்கொள்வேன்.

பணத்தை இழக்கும் அபாயம் அதிகம் உள்ளது. அதனால் நன்கு யோசித்துத்தான் முடிவெடுப்பேன்.

ராமு சிதம்பரம் - 50 வயது பெற்றோர் :

எனது மகனுக்கு 18 வயது, அவருக்கு வர்த்தகச் செயலிகளில் ஆர்வம் அதிகம் இருந்தது.

அவற்றில் முதலீடு செய்ய என்னிடம் அனுமதியும் அறிவுரையும் கேட்டார்.

நான் அவரது சேமிப்பில் இருந்து 20 விழுக்காடு ரொக்கத்தை முதலீடாக வைக்குமாறு கூறினேன்.

முதலீட்டை இழக்கும் அபாயம் அதில் அதிகம் என்பது அவருக்கு நன்கு தெரியும், அதேநேரம் லாபம் 20 விழுக்காட்டிற்கு மேல் வந்தால் அதை மீட்டுக்கொள்ளவும் கூறியுள்ளேன் 

எனது மகன் செயலிகள் மூலம் முதலீட்டு அனுபவத்தைப் பெறுவதற்காகத்தான் அந்த நடவடிக்கைக்கு அனுமதி கொடுத்துள்ளேன் என்றார் திரு.ராமு.   

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்