Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"வேலை செய்யும் நேரம், இடம் ஆகியவற்றில் நீக்குப்போக்கு இருப்பது முக்கியம்" - கருத்தாய்வு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் வேலை தேடுவோர் வேலை செய்யும் நேரம், இடம் ஆகியவற்றில் நீக்குப்போக்கு இருப்பதை மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர்.

குறிப்பாக இளையரிடையே இந்தப் போக்கு நிலவுகிறது.

Randstad நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் இது தெரியவந்துள்ளது.

18 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 760 பேர் ஆய்வில் கலந்துகொண்டனர்.

நீக்குப்போக்கிற்கு இடமில்லாத வேலையை ஏற்கப் போவதில்லை என்று ஐந்தில் 3 பேர் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட பாதிப்பேர் கூடுதலாக அலுவலகத்தில் இருக்கத் தேவைப்பட்டால் வேலையைவிடப் போவதாகக் கூறினர்.

சம்பளத்தைக் காட்டிலும் வேலை வாழ்க்கைச் சமநிலைக்கு இப்போது அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தற்போதைய, வருங்கால வேலைகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தில் அது தெரிகிறது.

சமூக விழிப்புணர்வும் கூடியுள்ளது.

பசுமை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிறுவனத்தில் சேரப் போவதில்லை என்று மூவரில் ஒருவருக்கு மேல் கூறினர்.

பன்முகத்தன்மைக்கு முக்கியத்துவம் தராத நிறுவனம் வழங்கும் வேலையை ஏற்கப் போவதில்லை என்று ஐந்தில் கிட்டத்தட்ட இருவர் தெரிவித்தனர்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்